திருப்பூர் : திருப்பூர், பெரிச்சிபாளையத்தில் உள்ள வீரமாத்தியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவ விழா நடந்தது.
கோவிலில் சிலம்பாத்தாள், பெத்தாயம்மன், கருப்பராயன் சுவாமி சன்னதிகளில் எழுந்தருளி அருள்பாலித்து வருகின்றனர். ஆண்டுதோறும், திருக்கல்யாண உற்சவ விழா மூன்று நாட்கள் நடைபெறும்.இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒரே நாள் விழாவாக நடந்தது. இதில் சிலம்பாத்தாள்,பெத்தாயம்மன், கருப்பராயனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும், மணவறையில் வைத்து திருக்கல்யாணமும் நடைபெற்றது.அதன்பின், அனைவருக்கும் மஞ்சள் மற்றும் பூ பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே பங்கேற்றனர்.