திருப்பூர்: திருப்பூர், காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா சிறப்பாக நடைபெற்றது. திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் சமேத சிவகாமி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனம் செய்தனர்.