நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருள்தரும் அய்யப்பன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழாவை முன்னிட்டு அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது.மூலவர் அய்யப்பன் சிறப்பு அலங்காரத்திலும் உற்சவர் அய்யப்பன் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை முருகன் குருக்கள் செய்தார். குருசாமிகள் தஷ்ணாமூர்த்தி, ராஜேந்திரன், ராதா, சேகர், வைத்தியநாதன், சாமிபிள்ளை, சிவகுருநாதன், கமலகண்ணன், கல்யாணசுந்தரம், தனசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.