ஆஷாட நவராத்திரி: திருநீறு அலங்காரத்தில் வாராகி அம்மன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2021 09:07
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வாராகி அம்மன், ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி, திருநீறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையத்தில் பாரதி நகர் செல்லும் வழியில் வாராகி மந்திராலயம் உள்ளது. இங்கு ஆனிமாத அமாவாசையையொட்டி, நவராத்திரி விழா நடந்து வருகிறது. இதில், வாராகி அம்மன் தினந்தோறும், பல்வேறு அலங்காரங்களில், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவையொட்டி, திருநீறு அலங்காரத்தில் வாராகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.