பதிவு செய்த நாள்
16
ஜூலை
2021
10:07
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜரை தரிசிக்க, கீழ சன்னதி முதல் தெற்கு சன்னதி வரை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன், ஆனித்திருமஞ்சன பெருவிழா தொடங்கியது. இதையடுத்து சாமிக்கு தினந் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று ஆனித் திருமஞ்சன தேரோட்டமும், ஆனிதிருமஞ்சனம் பக்தர்கள் இல்லாமல் நடந்தது .
ஆனால் கொரோனா இரண்டாவது, அலை ஊரடங்கு அமலில் உள்ளதால், கோவில்களில் திருவிழாக்கள் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதைத்தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு சிதம்பரம் எம்எல்ஏ பாண்டியன் தலைமையிலான அதிமுகவினர் பலர் தேரோட்டம் நடத்த போராட்டத்தில் ஈடுபட்டனர் . இந்நிலையில் இந்த தேரோட்டத்துக்கு அனுமதி மறுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனால் தீட்சிதர்கள் கோயிலுக்குள்ளேயே தேர் திருவிழாவை நடத்த முடிவு செய்தனர் அதன்படி நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு நடராஜரும் , அம்பாளும் சித்சபையில் இருந்து புறப்பட்டு கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். அதன் பிறகு, ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதற்கு பக்தர்கள் யாருக்கும் அனுமதிக்கப்பட வில்லை. இதையடுத்து காலை 9 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து பக்தர்கள் கீழே சன்னதி வழியாக கோயிலின் உள்ளே, தடுப்பு கட்டைகள் அமைத்து வரிசையில் சென்று ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்திருந்த நடராஜரையும், சிவகாமசுந்தரி, பஞ்சமூர்த்திகள் , உள்ளிட்ட சாமியை தரிசனம் செய்து வடக்கு சன்னதி கோபுர வாசல் வழியாக பொது மக்களை அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மதியம் 2 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.. இதன்பிறகு கோவில் நடை அடைக்கப்படும். இதையடுத்து இன்று 15ஆம் தேதி ஆனித்திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் சுவாமிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் மகா அபிஷேகம் நடைபெற்றது. நடராஜருக்கும் சிவகாம சுந்தரிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன.இதையடுத்து மாலை 5.30 மணியளவில் ஆனி திருமஞ்சன திருவிழா தரிசனம் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதியில்லாமல் நடந்தன. தொடர்ந்தும் ஆயிரங்கால் மண்டபத்தில் 5 மணி அளவில் நடராஜரும் சிவகாம சுந்தரியும், முன்னும் பின்னுமாக ஆடியபடி 5.30 மணி அளவில் கோயிலுக்குள் சித்சபைக்கு நடராஜரும் சிவகாம சுந்தரியும், சென்றனர். அதைத் தொடர்ந்து 5.45 , மணி அளவில் நடராஜரை தரிசனம் செய்ய பொதுமக்களுக்கு, பொதுமக்களுக்கு கீழ சன்னதி வழியாக அனுமதி கொடுக்கப்பட்டது. தரிசனத்தை பார்க்க பொது மக்களுக்கு தரிசனம் அனுமதி கிடைக்காததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், தெற்கு வீதியில் இருந்து, கீழ சன்னதி வரை பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று நடராஜரை தரிசனம் செய்ய சென்றனர் தொடர்ந்து நடராஜரை தரிசனம் செய்ய இரவு பதினோரு மணி வரை நீடிக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .