ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அருகே முத்து முனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், கோ பூஜை, நடைபெற்று, முதல் மற்றும் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் பீடத்தில் கும்ப நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு மூலவருக்கு சந்தன, குங்கும, பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆர்.எஸ்.மங்கலம் இந்து பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.