கொளஞ்சியப்பர் கோவிலில் கொடிமரம் அமைக்க பாலாலயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2021 11:07
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுாரில் சித்தி விநாயகர் உடனுறை கொளஞ்சியப்பர் கோவிலில் கொடிமரம் அமைக்க பாலாலயம் நடந்தது.
கோவிலில் நேற்று ஆனி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி, சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பர் சுவாமிகளுக்கு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நடந்தது. கோவில் வளாகத்தில் பழுதடைந்த கொடி மரத்தை மாற்றி அமைக்க, பாலாலயம் நிகழ்ச்சி காலை 9:30 மணியளவில் நடந்தது. அதில், சிவ மந்திரங்கள் ஓதி, புனித நீரால் கொடிமரத்திற்கு அபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணியளவில் பாலாலயம் நடந்தது. அறநிலையத்துறை உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் மாலா, ஊராட்சி தலைவர் நீதிராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.