கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடந்தது.அதனையொட்டி, நேற்றுமுன்தினம்திருவாசகம் முற்றோதல் துவங்கி, அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு நடராஜர், சிவகாமி அம்மை, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் சுவாமிகளுக்கு பேரொளி வழிபாடுநடந்தது.