கோயில் பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2021 02:07
முதுகுளத்துார் : முதுகுளத்துார் செல்லிஅம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காப்பு காட்டப்பட்டது. முதுகுளத்துார் செல்லிஅம்மன் கோயில் 45ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு காலை 6:00 மணிக்கு வருஷாபிேஷகம் மற்றும் புண்ணியதானம் நடந்தது. அம்மனுக்கு பால், சந்தனம், பன்னீர், இளநீர் உட்பட 21 வகையான அபிேஷகங்கள், தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்மன், கொடிமரத்திற்கும்,பக்தர்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. நிகழ்ச்சியில் கவுரவ தலைவர் பாலகுருசாமி, தலைவர் முத்துபாண்டி, துணைதலைவர் ராமமூர்த்தி, செயலாளர் ராமலிங்கம்,பொருளாளர் பெருமாள், ஏற்பாட்டினை பூஜாரி வெங்கடேசன்உட்பட பலர் செய்திருந்தனர்.