பதிவு செய்த நாள்
20
ஜூலை
2021
03:07
கிருஷ்ணகிரி : மயிலாடும்பாறை அகழாய்வில், 2,500 ஆண்டுகளுக்கு முன் மக்கள் பயன்படுத்திய நான்கு பானைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் மயிலாடும்பாறை, கீழடி, கொந்தகை, அகரம், கங்கை கொண்ட சோழபுரம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லுார், கொடுமணல், மணலுார் என, 10 இடங்களில் தற்போது அகழாய்வு பணிகள் நடக்கின்றன. மார்ச்சில் துவக்கம்கிருஷ்ணகிரி மாவட்டம், தொகரப்பள்ளி அருகில் உள்ள மயிலாடும்பாறையில், தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் கடந்த மார்ச் மாதம் முதல், தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அகழாய்வு இயக்குனர் சக்திவேல் கூறியதாவது:மயிலாடும்பாறை சானரப்பன் மலையில், மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. புதிய கற்காலம்மலையின் கீழ், 100க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் உள்ளன. 1980 மற்றும் 2003ல் நடந்த ஆய்வுகளில், அவை புதிய கற்காலத்தை சேர்ந்தவை என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த மூன்று மாத ஆய்வில், ஏற்கனவே பெருங்கற்காலத்தை சேர்ந்த 70 செ.மீ., நீளமுள்ள இரும்பு வாள் ஒன்றும், தற்போது அதே பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த நான்கு பானைகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக கருதப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.