பதிவு செய்த நாள்
22
ஜூலை
2021
11:07
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.ஆடி மாதத்தில் வரும் பிரதோஷம் விசேஷம். அந்த வகையில் ஆடி பிரதோஷமான நேற்று கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை 4:00 மணிக்கு சுவாமி, அம்மன் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சி.என்.பாளையம் மலையாண்டவர் என்ற ராஜராஜேஸ்வரர் ,சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.மங்கலம்பேட்டை மாத்ருபுரீஸ்வர் கோவிலில் காலை 10:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. மாலை 4:30 மணிக்கு நந்தி பகவானுக்கு அபி ேஷகம் நடந்தது. சின்னவடவாடி அருணாச்சலேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.
நெல்லிக்குப்பத்தில் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு அபிஷேகம் நடந்தது. பூஜைகளை குமார்,ஹரிபிரபு குருக்கள் செய்தனர். கைலாசநாதர், நடனபாதேஸ்வரர், திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், எய்தனுார் ஆதிபுரீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.சேத்தியாத்தோப்பு அடுத்த எறும்பூர் கதம்பவனேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. பின், கல்யாணசுந்தரி அம்மனுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிேஷகம் நடந்தது. மூலவர் கதம்பவனேஸ்வரர், கல்யாணசுந்தரி அம்மன், நந்திபகவானுக்கு தீபாராதனை நடந்தது.