ராமேஸ்வரம் கோவிலில் திருவாச்சி மிஸ்ஸிங் : இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஜூலை 2021 04:07
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்மன் சன்னதியில் திருவாச்சி இன்றி பூஜை செய்ய இந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ஓராண்டில் ரூ. 10 கோடிக்கு மேல் உண்டியல் காணிக்கை கிடைக்கிறது. ஆனால் கோவில் நிர்வாகம் குடிநீர், கழிப்பறை, இலவச தங்கும் வசதி ஏற்படுத்தாமல், பக்தர்கள் தவிக்கின்றனர். இந்நிலையில் சுவாமி சன்னதி அருகில் உள்ள காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்மன் சன்னதியில் மூலவருக்கு பின்புறத்தில் இருக்க கூடிய திருவாச்சி, ஓராண்டுக்கு முன் சேதமடைந்தது. இதனை புதுப்பிக்காமல் அகற்றி விட்டு பூஜை, தீபாரதணை நடக்கிறது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சரவணன் கூறுகையில்: திருவாச்சி இன்றி பூஜை செய்வது ஆன்மிக மரபு மீறலாகும். பிரசித்தி பெற்ற இக்கோவிலில் திருவாச்சியை சரிசெய்து நிறுவ வேண்டும். இல்லையெனில் பிச்சை எடுத்து, அந்த நிதியை இந்து அறநிலைத்துறை ஆணையருக்கு அனுப்பும் போராட்டம் நடத்துவோம் என்றார்.