விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த ஆண்பாக்கம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத சாகை வார்த்தல் விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று முன்தினம் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு மற்றும் தீபாராதனை நடந்தது. பின், கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் விழா நடந்தது. இதில், பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.