வாடிப்பட்டி: வாடிப்பட்டி நீரேத்தான் நவநீத பெருமாள் கோயிலில் ஆண்டாள் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.நேற்றுகாலை சிறப்பு பூஜைகள், இருவீட்டார் அழைப்பை தொடர்ந்து 10:20 மணிக்கு பட்டர் பாலாஜி திருமண யாகசாலை பூஜை நடத்த பாகவதர்கள் ரவி ஆண்டாளாகவும், சாரங்கன் ரெங்கநாதனாக வேடமிட்டு மாலை மாற்றி கொண்டனர். முளைப்பாரிகளை பெண்கள் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பரம்பரை அர்ச்சகர் நவநீதகண்ணன்,பாகவதோத்மார்கள் செய்திருந்தனர்.