திருப்புத்தூர் அம்மன் கோயில்களில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2021 01:07
திருப்புத்தூர்: திருப்புத்துார் அம்மன் கோயில்களில் ஆடிவெள்ளியை முன்னிட்டு நேற்று பக்தர்கள் பால்குடம், பொங்கல் வைத்து தரிசித்தனர். நகரின் மேற்கு எல்லைத் தெய்வான ராஜகாளியம்மன் கோயிலில் காலை 7:00 மணிக்கு அபிசகேம் நடந்து அம்மன் வெள்ளி கவசத்தில் பக்தர்குளுக்கு அருள்பாலித்தார். காலை முதல் பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைத்த நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். பூமாயிஅம்மன் கோயிலில் காலையில் மூலவர் அம்மனுக்கு அபிசேகம் நடந்து சந்தனக்காப்பு, வெள்ளி அங்கியில் ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் குடும்பம் வாரியாக பால் குடம் எடுத்தனர். அம்மனுக்கு கூழ் வார்த்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. புதுப்பட்டியில் மாவுடியூத்து காளியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா கொரோன ஊரடங்கால் நடைபெறவில்லை. சம்பிரதாயமாக சாமியாடிகள் பூசாரிகள் மட்டும், கோவில் வாசலில் பொங்கல் வைத்து, தீபாராதனையுடன் வழிபட்டனர்.