பதிவு செய்த நாள்
31
ஜூலை
2021
01:07
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம், சின்ன தடாகம், துடியலூர் வட்டாரங்களில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.
நரசிம்மநாயக்கன்பாளையம் மெயின் ரோட்டில், பத்மாலயா நகர் முன்பு அமைந்துள்ள காமாட்சியம்மன் கோவிலில், ஆடி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமையொட்டி, அருள்மிகு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மலர் அலங்காரத்தில், காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரியநாயக்கன்பாளையம் காமராஜர் நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலில், ராஜராஜேஸ்வரி அம்மன், சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில், ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவிலுக்கு முன்பு, சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்தபடி பக்தர்கள் சக்தி மாரியம்மனை வழிபட்டு சென்றனர். இதேபோல, துடியலூர் பெரியநாயக்கன்பாளையம், சின்ன தடாகம், கவுண்டம்பாளையம் வட்டாரங்களில் உள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.