பழநி: பழநி மலைக்கோயிலில் கொரோனா ஊரடங்கு தளர்விற்கு பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கபட்டு வருகின்றனர். அவர்கள் மலை மேல் சென்று, கீழிறங்க படிப்பாதை, வின்ச், ரோப்கார் உள்ளன. இதில் தற்போது படிப்பாதை, வின்சில் பக்கர்கள் மேலே சென்று கீழிறங்கி வர அனுமதிக்க படுகின்றனர். மூன்று வின்ச்கள் தற்போது இயங்கி வருகின்றன. இந்நிலையில் பக்கர்கள் கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்க வின்ச்க்கு டிக்கெட் வழங்க மலை கோயில் வெளி பிரகாரத்தில் தனி பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தர்களுக்கு கீழே செல்ல டிக்கெட் வழங்கபட்டு வின்ச் நிலையத்திற்கு அனுப்ப படுகின்றனர். இதனால் வின்ச் ஸ்டேசனில் கூட்ட நெரிசல் குறைவாகவும், சமுக விலகலை கடைபிடிக்க வசதியாக உள்ளது.