ஆடிக் கிருத்திகை : முருகன் கோவில்களில் அலங்கார பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2021 08:08
சூலூர்: ஆடிக்கிருத்திகையை ஒட்டி, முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
ஆடிக்கிருத்திகையை ஒட்டி, சூலூர் வட்டாரத்தில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில், சூலூர் சிவன் கோவில், குமரன் கோட்டம், கண்ணம்பாளையம், கோவை பழனி கோவில், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. மகாதீபாராதனை முடிந்து பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கிராம கோவில்களிலும் குறைந்த அளவே பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.