ஊத்துக்கோட்டை: பூண்டி அருகே ஆடிக் கிருத்திகையையொட்டி, முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண வைபவம் கோலகலமாக நடந்தது.
பூண்டி ஒன்றியம், பென்னலுார்பேட்டை கிராமத்தில் உள்ளது வள்ளி, தேவசேனா சமேத பெரியவேல் முருகன் கோவில். இக்கோவிலில், ஒவ்வோர் ஆண்டும் ஆடிக் கிருத்திகை நாளில் திருக்கல்யாண உற்சவம் நடப்பது வழக்கம்.ஆடிக் கிருத்திகை நாளை ஒட்டி, பென்னலுார் பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் காவடி ஏந்தி வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். மாலை, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.