ஆடிப்பெருக்கு : மாங்கல்ய பலம்பெற மஞ்சள் கயிறு மாற்றி பெண்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஆக 2021 11:08
காரைக்குடி: காரைக்குடி பகுதியில் உள்ள கோயில்களில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பெண்கள் மாங்கல்ய பலம் பெற மஞ்சள் கயிறு மாற்றி வழிபாடு செய்தனர்.
ஆடி 18 ஆம் தேதி ஆடிப்பெருக்காக கொண்டாடப்படுகிறது. புதுமண தம்பதிகள் மாங்கல்ய பலம் பெற கோயில்களில் மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்வர். இந்நாளில் சேமிப்பு பன்மடங்கு பெருகும் என்ற நோக்கில் பலரும் தங்க நகைகள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக, கோயில்களுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கோயில்களுக்கு வெளியே மஞ்சள்கயிறு மாற்றினார். மேலும் கோயில் தெப்பத்தில் மகாலட்சுமியை வழிபடும் நோக்கி பால் தேன் சர்க்கரை வைத்து வழிபாடு செய்து மஞ்சள் கயிறு மாற்றிக் கொண்டனர். காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் முன்பு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். வாசல் முன்பு நின்று மஞ்சள் கயிறு மாற்றிய பெண்களை வீட்டிற்கு சென்று வீட்டில் அமர்ந்து கயிறு மாற்றம் படி அறிவுறுத்தினர்.