ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை நடைமேடையை தகவல் பலகை வைக்க குழி தோண்டியதால், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.
ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்க, அடிப்படை வசதிகள் ஏற்படுத்திட மத்திய அரசு அம்ருத் சிட்டி திட்டத்தில் பல கோடி ரூபாய் ஒதுக்கியது. இதில் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் 300 மீட்டர் தூரத்தில் இரு ஆண்டுக்கு முன் நடைமேடை அமைத்தனர். இதில் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நடந்து சென்று கடல் அழகை கண்டு ரசித்தும், உள்ளூர் மக்கள் நடைப் பயிற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் தகவல் பலகை வைக்க நகராட்சி கடந்த இரு நாட்களாக நடைமேடையில் குழிதோண்டி வருகிறது. நடைமேடை புதுப்பிக்கும் போது தகவல் பலகை வைக்காமல் தற்போது சேதப்படுத்தியதால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சிரமபடுவதுடன், அரசு நிதியும் வீணாகியது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.