தேவகோட்டை: தேவகோட்டை அழகாபுரி தெற்குத் தெரு முத்து மாரியம்மன் கோயில் ஆடி முளைப்பாரி விழா ஜூலை 27 ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது. தினமும் காலையில் அபிஷேகம் செய்யப்பட்டு மாலையில் அம்மனுக்கு பல உருவங்களில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. நிறைவு நாளான இன்று அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்தி கடனை நிறைவேற்றினர். மாலையில் கருமாரி அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நூற்றுக்கணக்கான பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி தூக்கி வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
தண்டாயுதபாணி கோயில் தெருவில் உள்ள செல்வ முத்து மாரியம்மன் கோயில் ஆடி முளைக்கொட்டு திருவிழா ஒரு வாரம் நடந்தது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து மாலையில் சிறப்பு அலங்காரம் செய்விக்கபட்டு சிறப்பு பூஜை கள் நடந்தன. வெள்ளிக்கிழமை பக்தர்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்து வழிப்பட்டனர். நிறைவு நாளான நேற்று பகலில் கோயில் கிரகம், பால்குடம் எடுத்து வந்து நேர்த்தி கடனை செலுத்தினர். சர்வ அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து முளைக்கொட்டி வழிப்பட்டனர்.