சித்தூர் : ஸ்ரீ காளஹஸ்தி அடுத்துள்ள சுருட்டு பள்ளியில் வீற்றிருக்கும் ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரர் சுவாமி கோயிலில் இன்று வெள்ளிக்கிழமை மாலை நந்தீஸ்வரருக்கு பிரதோஷ காலப்பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பஞ்சாமிர்தம் உட்பட சுகந்த திரவியங்கள், பால் ஆகியவற்றால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும் பல விதமான மலர்களால் அலங்காரம் செய்ததோடு வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்களுடன் மகா ஆரத்தி சமர்ப்பிக்கப்பட்டது .தொடர்ந்து உற்சவ மூர்த்திகளை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்லக்குகளில் ஆலய பிரகாரம் சுற்றி ஊர்வலம் நடத்தப்பட்டது .இதில் ஏராளமான பக்தர்கள் நந்தீஸ்வரரை தரிசனம் செய்துகொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர் . பக்தர்களால் கோயில் சிவநாமம் முழங்கியது . பின்னர் பக்தர்களுக்கு கோவில் சார்பில் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர் . இந்நிகழ்ச்சியில் கோயில் பிரதான அர்ச்சகர் கார்த்திகேயன் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.