தொண்டி : அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை நடந்தது. தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயில் உள்ளது. ராமபிரான் வழிபட்ட இக் கோயிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் அங்குள்ள கடலில் புனித நீராடி விட்டு, சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா ஊரடங்கால் நீராட தடை விதிக்கபட்டு, கடற்கரைக்கு யாரும் செல்லாத வகையில் போலீசார் தடுப்பு அமைத்தனர். இதனால் பக்தர்கள் நீராடவில்லை. கோயிலில் சிறப்பு பூஜைகள் மட்டும் நடந்தது.
திருப்புல்லாணி: திருப்புல்லாணி புல்லாணி அம்மன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. மூலவருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது. பூஜைகளை அரியமுத்து செய்திருந்தார்.பெண்கள் நெய்விளக்கேற்றியும், மாவிளக்கு எடுத்து வழிபட்டனர்.