செம்பட்டி : ஆத்துார் அருகே சடையாண்டி கோயில் விழாவில் தடையை மீறி பக்தர்கள் நள்ளிரவில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்
ஆத்துார் அருகே அக்கரைப்பட்டி மலை குகையில் சடையாண்டி கோயில் உள்ளது. கொரோனாவால் நேற்று நடக்க இருந்த ஆடி அமாவாசை திருவிழா ரத்து செய்யப்பட்டது. போலீசார் அனைத்து வழித்தடங்களிலும், தடுப்புகள் அமைத்து கண்காணித்தனர். இருப்பினும் நேற்று முன்தினம் இரவு தடையை மீறி பக்தர்கள் சிலர் வழிபாடு நடத்தினர். அடிவார கோயிலில், ஆடு, கோழி பலியிடல், பொங்கல் வைத்தல், மொட்டை அடித்து நேர்த்திக்கடன்களை செலுத்தினர். வெளிமாவட்ட பக்தர்கள் வழியோர தென்னந்தோப்புகளில் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
* தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.