பெங்களூரு: பெங்களூரு நகரில் கோவில்களில் விழாக்கள், பண்டிகைகள் கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநில மேலாண்மை ஆணையத்தின் சார்பில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், கோவில்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: பண்டிகை மற்றும் விழா கொண்டாட்டங்கள் என மக்கள் கூடுவதற்கு தடைவிதிக்கப்படுகிறது. தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிகழ்வுகளை தவிர, மற்ற எந்த காரணத்துக்காகவும் பஸ், ரயில் நிலையங்களை தவிர, மற்ற இடங்களில் நான்கு பேருக்கும் அதிகமானோர் கூடுவதை தவிர்க்க வேண்டும். இந்த நடைமுறை, வரும் 16 வரை பின்பற்றுவதற்கு உத்தரவிடப்படுகிறது. இந்த விதிமுறையை மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.