பதிவு செய்த நாள்
10
ஆக
2021
03:08
திருத்தணி: திருத்தணி நகராட்சியில், இன்று, அம்மன் கோவில்களில் நடைபெறும் ஜாத்திரையில், பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
திருத்தணி நகராட்சியில் உள்ள தணிகை மீனாட்சி அம்மன், தணிகாசலம்மன், படவேட்டம்மன், துர்கை அம்மன், எல்லையம்மன், அங்காள பரமேஸ்வரி மற்றும் கங்கையம்மன் ஆகிய கோவில்களில், நடப்பாண்டிற்கான ஜாத்திரை விழா இன்று நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக, பக்தர்கள் தரிசனத்திற்கும், வழிபாடுகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல், பூகரகம் மற்றும் உற்சவர் அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஜாத்திரையின் போது மூலவர் அம்மனுக்கு நடைபெறும் நள்ளிரவு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் பக்தர்கள் அனுமதியின்றி நடைபெறுகின்றன.