பதிவு செய்த நாள்
10
ஆக
2021
07:08
வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம், ஊத்துக்காடு கிராம எல்லம்மன் கோவில், பரம்பரை நிர்வாக அறங்காவலர் மற்றும் பங்குதாரர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆடி, ஆவணி ஆகிய மாதங்களில், கோவிலில் அம்மனுக்கு பொங்கலிட்டு, நேர்த்திக்கடன் செலுத்த பலரும் வருவர்.இதனால் கூட்டம் கூடுவதை தடுக்க, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, பிற நாட்களில் காலை 9:00 மணி முதல் 11:00 மணி; மாலை 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மட்டும் சுவாமி தரிசனத்திற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதற்கு ஏற்ப, பக்தர்கள் வரிசையில் நின்று செல்வதற்கு ஏற்ப, தடுப்பு கட்டைகளை அமைத்து, சமூக இடைவெளியுடன் சுவாமியை தரிசிக்க, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.