திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆடிப்பூர உற்ஸவம் இன்றுடன் நிறைவடைகிறது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆண்டாள் பிறந்த நட்சத்திரமான ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆடிப்பூர உற்ஸவம் பத்து நாட்கள் நடைபெறும். தற்போது ஆக.2 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மாலையில் பெருமாள், ஆண்டாள் பள்ளியறையில் எழுந்தருளல், தொடர்ந்து தென்னமரத்து வீதி புறப்பாடு நடந்தது. பின்னர் திருமஞ்சனம் நடக்கும். ஏழாம் திருநாளில் சூர்ணாபிஷேகம் நடந்தது. இன்று ஆடிப்பூரம் நட்சத்திர நாளை முன்னிட்டு காலை பெருமாளுக்கும் ஆண்டாளுக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மாலை தங்கப்பல்லக்கில் பெருமாளும் ஆண்டாளும் பிரகார வலம் வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு விதிகளால் கடந்த ஆண்டும் தேரோட்டம் நடைபெறவில்லை. இன்றும் வழக்கமாக நடைபெறும் ஆடித் தேர் ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த உற்ஸவம் இன்றுடன் நிறைவடைகி|றது.