ஆடிப்பூர விழா: கோயில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2021 09:08
பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் உப கோயில்களில் ஆடிப்பூர தினமான இன்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவுக்கு பின் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஹிந்து அறநிலையத்துறை சொந்தமான திருக்கோயில்களில் ஆடி அமாவாசை, ஆடிப்பூர நாட்களில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடைவிதிக்க என அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஆடிப்பூரத்தை முன்னிட்டு பழநி மலைக் கோயில் மற்றும் உப கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.