சித்தானந்த சுவாமி கோவிலில் காணிக்கை உண்டியல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஆக 2021 04:08
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி இருந்தனர்.கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், பக்தர்கள் முன்னிலை யில் உண்டியல் திறந்து, காணிக்கை எண்ணப்பட்டது.கோவில் சிறப்பு அதிகாரி கிருஷ்ணமூர்த்தி மணிகண்டன், கோவில் குருக்கள் தேவசேனாதிபதி, கணக்காளர் சீனுவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.கொரோனா ஊரடங்கு தளர்வுக்குபின் திறக்கப்பட்ட உண்டியலில், 99 ஆயிரத்து 830 ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.