Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துலாம் : ஆவணி ராசிபலன் தனுசு : ஆவணி ராசிபலன் தனுசு : ஆவணி ராசிபலன்
முதல் பக்கம் » ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை)
விருச்சிகம் : ஆவணி ராசிபலன்
எழுத்தின் அளவு:
விருச்சிகம் : ஆவணி ராசிபலன்

பதிவு செய்த நாள்

16 ஆக
2021
03:08

விசாகம் - 4:
இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன்பிறகே நியாயத்தை சொல்லும் குணமுடைய விசாகம் - 4 நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.  பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மனமகிழ்ச்சியை தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான  பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின்மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல்  இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன், மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள்  தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். பெண்களது செயல்களுக்கு இருந்த முட்டுகட்டைகள் விலகும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  அரசியல்வாதிகளுக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்:  சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றுவதும் உடல் ஆரோக்கியத்தை தரும். குடும்ப பிரச்சனை தீரும்.
சந்திராஷ்டம தினம்: ஆகஸ் - 30
அதிர்ஷ்ட தினம்: ஆகஸ் - 17, 18; செப் - 13, 14

அனுஷம்:
பிரச்சனை என்று வரும் போது அதில் சிக்காமல் சாமர்த்தியமாக நழுவும் திறமை உடைய அனுஷம் நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும்.  மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம்  கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்தபின் முடிவு எடுப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின்  கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல்  இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த பூசல்கள் சரியாகும்.  பிள்ளைகளுக்கு தேவையன பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும். பெண்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். கலைத்துறையினர எதிர்த்து  பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.  அரசியல்வாதிகளுக்கு சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும்.  மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானை முல்லை மலர் சாற்றி, நெய்தீபம் ஏற்றி வணங்க செல்வம் சேரும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.  
சந்திராஷ்டம தினம்: ஆகஸ் - 31; செப் - 01
அதிர்ஷ்ட தினம்: ஆகஸ் - 18, 19; செப் - 15

கேட்டை:
சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் உணர்ச்சிவசப்படக் கூடிய கேட்டை நக்ஷத்ர அன்பர்களே, இந்த மாதம் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சனைகளிலும் வாக்குவாதத்திலும்  வெற்றியே கிடைக்கும்.  பணவரத்தும் கூடும். ஆனால் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை  நம்புவதிலும் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகி செல்லலாம். மாற்று மதத்தினரின்  உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபட தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள்  திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சிறிய  வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களை புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியை தரும்.  பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி  பொறுப்புகளை  ஒப்படைப்பதில் கவனம் தேவை.  கலைத்துறையினருக்கு பேச்சு சாமர்த்தியம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த போட்டிகள்  விலகும். பாடங்களை படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
பரிகாரம்: முருகனை வணங்கி வழிபட வாழ்க்கை வளம் பெறும்.
சந்திராஷ்டம தினம்: செப் - 01, 02
அதிர்ஷ்ட தினம்: ஆகஸ் - 19, 20; செப் - 16

 
மேலும் ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »
temple news
அசுவினி; வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உள்ள உங்களுக்கு ஆனி மாதம் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்தெளிவான சிந்தனையும், உறுதியான எண்ணமும் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்புத்தி சாதுரியம் கொண்ட உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் யோகமான மாதமாகும். தைரிய ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்வாழ்வின் உண்மையான அர்த்தம் தெரிந்த உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் கவனமாக செயல்பட ... மேலும்
 
temple news
மகம்வாழ்வில்  நெருக்கடி வந்தாலும் எல்லாவற்றையும் சமாளிக்கும் உங்களுக்கு பிறக்கும் ஆனி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar