முத்தாலம்மன் கோயில் மண்டகப்படி மண்டபத்தை அகற்ற எதிர்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2021 02:08
பாலசமுத்திரம்: பழநி, அருகே பாலசமுத்திரத்தில் முத்தாலம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் பல தலைமுறையாக வழிபாடு செய்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோயிலின் மண்டகப்படி மண்டபம் அப்பகுதி உள்ளது. இதன் முன் சிறு மண்டபம் கட்டியுள்ளனர். இது குறித்து தனியார் ஒருவர் அவர் வீட்டுக்குச் செல்லும் பாதை மறைக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி மண்டபத்தை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முயன்று வருகிறது. இதனை அறிந்த பொதுமக்கள் கோயில் மண்டகப்படி மண்டபத்தை அகற்றக்கூடாது என நூற்றுக்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டனர். இதுகுறித்து அவர்கள் மனு அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர். பேரூராட்சி அதிகாரி கூறுகையில், நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பை அகற்ற போலீசார் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளது. என்றார்.