அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் வழக்கறிஞராக பணியாற்றிய காலம் அது. பல வழக்குகளை நீதிமன்றத்துக்கு கொண்டு போகாமல், தாமே இருதரப்பையும் பேசி தீர்த்து வைப்பார். செல்வந்தர் ஒருவர், லிங்கனிடம் ஒரு வழக்கை கொண்டு வந்தார். ‘‘என்னிடம் ஒரு வழக்கறிஞர் பத்து டாலர் கடன் வாங்கி அதை தராமல் இழுத்தடிக்கிறார். அவர் மீது வழக்குத்தொடர வேண்டும்’’ என்றார். “இதற்கு இருபது டாலர் செலவாகும்’’ என்று லிங்கன் கேட்கவே, அவரும் கொடுத்தார். செல்வந்தரிடம் கடன் வாங்கிய வழக்கறிஞரிடம் பத்து டாலரை கொடுத்தார் லிங்கன். அதை செல்வந்தரிடம் கொடுத்து அவரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்றும் கூறினார். அவரும் அதை கொடுக்கவே, மனம்மாறிய செல்வந்தர் வழக்குத் தொடரவில்லை. மீதியிருந்த பத்து டாலரை செல்வந்தரிடம் கொடுத்து நடந்ததை கூறினார் லிங்கன். “இதுபோல் சிறு சிறு விஷயங்களுக்கு எல்லாம் இங்கு வரவேண்டாம். மனிதநேயத்துடன் நடந்தாலே போதும் பிரச்னை சரியாகவிடும்’’ என்று புத்திமதி சொல்லி அனுப்பிவைத்தார். அனைவரையும் நேசிப்போம். மனிதநேயத்தை காப்போம்.