பழநி: பழநி மலைக் கோயிலில் மேலே சென்று வர ரோப்கார், வின்ச், படிப்பாதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் தற்போது வின்ச், படிப்பாதையும் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் மூன்று நிமிடத்தில் மலைமீது செல்லவும், கீழே இறங்கி வரவும் பயன்பட்டு வந்தது. தற்போது இதில் பொருத்த புதிய சதுர பெட்டிகள் தயாராக உள்ளன. புதிய ரோப், சாப்ட்கள் பொருத்தப்பட உள்ளன. இந்நிலையில் நேற்று கொல்கத்தாவிலிருந்து புதிய சாப்ட் வரவழைக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. ஒரு லட்சம் ஆகும். இதனை என்.ஐ.டி நிபுணர்கள் ஆய்வு செய்தனர். ஷாப்ட் சுத்தம் செய்யப்பட்டு புதிய வர்ணம் பூசப்பட்ட மெட்டீரியல் புரோக்கர் மூலம் மலைமீது கொண்டு செல்லப்பட்டது. இதனை ரோப்காரில் மலைமேல் உள்ள இயந்திரத்தில் பொருத்த பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்து விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப் கார் சேவை வரவேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.