துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று முதல் செப்.,5 வரை தரிசனத்திற்கு அனுமதியில்லை என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த வாரங்களில் திங்கள் முதல் வியாழன் வரை தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணித்திருவிழா இன்று துவங்குகிறது. 12 நாள் நடக்கும் விழாவில் 10ம் நாளில் தேரோட்டம் நடக்கும். ஆனால் இந்த ஆண்டும் கொரோனாவால் விழாக்கள் கோவில் வளாகத்திலேயே பக்தர்களின்றி நடக்கிறது. தேரோட்டம் நடக்கவில்லை. கூட்டத்தை தவிர்க்க இன்று முதல் செப்.,5 வரை தரிசனத்திற்கு அனுமதியில்லை என, துாத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.