பதிவு செய்த நாள்
28
ஆக
2021
12:08
திருத்தணி : திருத்தணி கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
திருத்தணி, பழைய பஜார் தெருவில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலின் கும்பாபிஷேகம் நடந்து, 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இதையடுத்து, கோவில் நிர்வாகிகள், மஹா கும்பாபிஷேகம் நடத்த தீர்மானித்தனர்.நேற்று, காலை, 7:00 மணிக்கு, கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கோவில் விமானத்தின் மீது கலச நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
உளுந்தை: உளுந்தை ஊராட்சியில், மணிகண்டேஸ்வரர் கோவிலில் நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.கடம்பத்துார் ஒன்றியம், உளுந்தை ஊராட்சியில் உள்ளது மணிகண்டேஸ்வரர் கோவில். இந்த கோவிலில், நேற்று காலை, 8:45 மணிக்கு, மஹா கும்பாபிஷேகம் நடந்தது.முன்னதாக, காலை, 8:30 மணிக்கு, கலச புறப்பாடும் அதை தொடர்ந்து விமான மஹா கும்பாபிஷேகமும், மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகமும், மஹா தீபாராதனையும் நடந்தது.அன்று மாலை, மஹா அபிஷேகமும் தொடர்ந்து திருக்கல்யாணமும் மலர் அலங்காரத்தில் வீதியுலாவும் நடந்தது.