திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பவித்ர உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2021 01:08
திருக்குறுங்குடி: திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பவித்ர உற்சவம் நேற்று நிறைவடைந்தது. கைசிக விருத்தாந்த ஸ்தலமான அழகிய நம்பிராயர் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் 7நாட்கள் பவித்ர உற்சவம் நடைபெறும். இந்தாண்டு 9 நாட்கள் நடைபெற்றது. அதன் படி 19ம் தேதி துவங்கிய பவித்ர உற்சவம் நேற்று நிறைவடைந்தது. உற்சவ நாட்களில் காலை விஸ்வரூப தரிசனம், வித்ர உற்சவ சயனம், திருமஞ்சனம், திருவாராதனம் தொடர்ந்து ரக்சா பந்தன், திரு வித்ர மாலை சாத்துதல் கோஷ்டி பெற்றது. மாலையில் சிறப்பு பூஜைகள், கோயில் உட்பிரகாரத்தில் பெருமாள் புறப்பாடாகி ஜீயர் சுவாமிகள் எழுந்தருளி கோஷ்டி நடைபெற்றது. உற்சவத்தின் நிறைவு நாளன நேற்று மங்களாட்சதையுடன் உற்சவம் நிறைவடைந்தது. நேற்று திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடந்தது. அழகிய நம்பிராயர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். மாலையில் உள் பிரகாரத்தில் பெருமாள் புறப்பாடு பெற்றது. ஏற்பாடுகளை ஜீயர் மடம் வர் ஏஜன்ட் சிவசங்கரன் தலைமையில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.