பதிவு செய்த நாள்
29
ஆக
2021
02:08
நம் வீட்டு குழந்தைகளுக்கு பிறந்தநாள் என்றால், பெரியவர் களெல்லாம் இணைந்து வாழ்த்துச் சொல்வோம். ஆனால், இந்தச் சின்னக்கண்ணன் நமக்கெல்லாம் ஆசி தருபவன். ஏனெனில், அவனே இந்த உலகில் எல்லாமாக இருக்கிறான். நாம் அவனை உறவினனாக பார்க்கலாம். ஆம்...தாயாய், தந்தையாய், குருவாய், குழந்தையாய், நண்பனாய், அரசனாய், சீடனாய், மந்திரியாய், நல்லாசிரியனாய், தெய்வமாய், சேவகனாய்...எப்படி வேண்டுமானாலும் அவனைக் காணும் உரிமையை அவன் நமக்கு அளித்துள் ளான். அவனது அவதார நன்னாளில், மகாகவி பாரதியார் பாடிய கண்ணன் பிறப்பு பாடலை நாமெல்லாம் பாடி மகிழ்வோமா!
கண்ணன் பிறந்தான் எங்கள்
கண்ணன்பிறந்தான் இந்தக்
காற்றதை எட்டுத்திசையிலும் கூறிடும்
திண்ணமுடையான் மணி
வண்ணமுடையான் உயர்
தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்
பண்ணை இசைப்பீர் நெஞ்சிற்
புண்ணை யொழிப்பீர் இந்தப்
பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை
எண்ணிடைக் கொள்வீர் நன்கு
கண்ணை விழிப்பீர் இனி
ஏதும் குறைவில்லை; வேதம் துணையுண்டு.