கிருஷ்ணஜெயந்தி.. குறை ஒன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2021 08:08
வானில் ஒரு தீபாவளி: இதென்ன அதிசயம்! கிருஷ்ணர் பிறந்த போது தேய்பிறை அஷ்டமி ஆயிற்றே! வானில் ஒரு தீபாவளி போல பவுர்ணமி எப்படி ஏற்பட்டது? கிருஷ்ணர் அவதரித்த போது கிரகங்கள் எல்லாம் சுபமான இடத்தில் இருந்தன. தேய்பிறை அஷ்டமியாக இருந்தாலும் பகவான் கிருஷ்ணர் சந்திர வம்சத்தைச்சேர்ந்தவர் என்பதால் வானில் பவுர்ணமி பிரகாசித்தது. நான்கு கைகள், கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஏந்தியபடி பெற்றோருக்கு காட்சியளித்தார். கரிய மேகம் போன்ற அவர் மஞ்சள் பட்டாடை, நவரத்தின ஆபரணங்கள் சூடியிருந்தார். அவரைப்பெற்ற தாய் தேவகியும் தெய்வப் பெண் போல ஜொலித்தாள்.
மகிழ்ச்சி நிலைக்க: மகாவிஷ்ணு சூரிய வம்சத்தில் ராமனாக அவதாரம் செய்ததால் ரவிகுல திலகன் என்று அழைக்கப்பட்டார். சூரியனைப்போல தானும் பெருமை பெற வேண்டும் என சந்திரன் வேண்டினார். மனமிரங்கிய மகாவிஷ்ணு " உன் பெயரை என்னோடு சேர்த்துக்கொள்கிறேன்" என்று சொல்லி ராமச்சந்திர மூர்த்தி என மாற்றிக்கொண்டார். அத்துடன் அடுத்த அவதாரத்தில் சந்திர வம்சத்தில் அவதரிப்பதாகவும் வாக்கு கொடுத்தார்.இதனடிப்படையில் கிருஷ்ண ஜெயந்தியான இன்று பூஜை முடித்து நிலாவை பார்ப்பதால் மகிழ்ச்சி நிலைக்கும்.
பாவம் போக்குபவர்: பஜனையில் கோஷமிடும் போது முதலில் சொல்பவர் சர்வத்ர கோவிந்தநாம சங்கீர்த்தனம் என்று கோவிந்தன்ர பெயரசை் சொல்வார். உடனே அனைவரும் " கோவிந்தா கோவி்நதா" என்ற சொல்வர். சர்வத்ர என்பதற்கு எல்லாக்காலத்திலும், எல்லா இடத்திலும் என் பொருள். பரம் பொருளான மகாவிஷ்ணு பசுக்களுடன் உறவாடியதால் ஏற்பட்ட நாமம் கோவிந்தன் என்பதாகும்.இப்பெயரசை் சொன்னாலும் கேட்டாலும் பாவம் தீரும்.கோவர்தத்ன மலையை குடையாகப் பிடித்த கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் நடத்தினான் இந்திரன். இதனால் மன்னர் என்னும் பொருளில் கோவிந்தராஜன் என்று கிருஷ்ணர் அழைக்கப்பட்டார்.
பூஜைக்கு புல்லாங்குழல்: நாகர்கோவில் அருகிலுள்ள அழகிய பாண்டியபுரத்தில் அழகிய நம்பி கோயில் உள்ளது. இங்கு குழந்தை கண்ணன் தூங்கி கொண்டிருப்பதாக ஐதீகம் அவரது தூக்கம் கலையாம ல் இருக்க நாதஸ்வரம் தவில் போன்ற வாத்தியங்களை இசைப்பதில்லை. பூஜையின் போது தாலாட்டும் விதமாக புல்லாங்குழல் இசைக்கின்றனர்.
பார்த்தாலே பரவசம்: கடவுளை ஒளி வடிவில் வழிபடுவது ஞானிகளின் நிலை. ஆனால்நம்மை போன்ற எளிய மனிதர்களால் அப்படி வழி பட முடியாது என்பதால் தான் கிருஷ்ணராக அவதரித்தார் மகாவிஷ்ணு. மதுசூதன சரஸ்வதி என்னும் அருளாளர் கிருஷ்ணர் மீது ஆனந்த மந்தாகினி ஸ்தோத்திரம் பாடினார். இதில் " ஞானிகள் மனதை அடக்கி தங்களுக்குள் ஜோதி வடிவில் கடவுளை தரிசிப்பர். அதற்காக மற்றவர்கள் தவம் செய்ய முடியவில்லையே என வருந்த தேவையில்லை. அந்த ஜோதியே நீலமேனியுடன் கார்மேக வண்ணனாக கிருஷ்ணராக யமுனை நதிக்கரையில் ஓடி விளையாடியது. அவரை பார்த்தாலே மனம் பரவசப்படும். வளமான வாழ்வு, மோட்சம் கிடைக்கும் என்கிறார்.