அயோத்தி ராமர் கோவில் செல்லும் புனித நீர் கிருஷ்ணகிரி வருகை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2021 12:08
கிருஷ்ணகிரி: அயோத்தி ராமர் கோவில் செல்லும் புனித நீர், மக்களின் வழிபாட்டுக்கு கிருஷ்ணகிரி வந்தது. காஞ்சிபுரம் சங்கரமடம் மற்றும் சிருங்கேரி சங்கரமடம் இணைந்து, பாரதத்தின், 16 புண்ணிய நதிகளில் இருந்து, புனித தீர்த்தம் மற்றும் புனித மண்ணை, நாடு முழுவதும், ஒரு கோடி மக்களிடம் கொண்டு சென்று வழிபாடு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். காஞ்சிபுரம் சங்கரமடம் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் யாத்திரையை கடந்த, 9ல் துவக்கி வைத்தார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று, அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் புனித நீர் மற்றும் மண்ணை கொண்டு செல்ல உள்ளனர். இந்த புனித யாத்திரை வாகனம், கிருஷ்ணகிரி புதுப்பேட்டை ரவுண்டானாவில் துவங்கி, பழையபேட்டை, புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் வலம் வந்தது. நேற்று காலை கிருஷ்ணகிரி புதுப்பேட்டை கிருஷ்ணன் கோவிலில் இருந்து துவங்கி, நகர் முழுவதும் சென்றது.