திருச்செந்துார் ஆவணித் திருவிழா: சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2021 10:09
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி 7ம் திருவிழாவான நேற்று சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் உள்பிரகாரத்தில் எழுந்தருளினார். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி யிலில் ஆவணித் திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி குமரவிடங்கப் பெருமான், வள்ளிகோயில் உட்பிரகாரத்தில் எழுந்தருளி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7ம் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை ஒரு மணிக்கு கேtயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம். அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன. அதிகாலை 5:30 மணிக்கு சுவாமி சண்முகர் உருகு சட்ட சேவை நடந்தது. பின்பு சுவாமி சண்முகர் ஐராவத மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி ண்முகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு வெட்டிவேர் சப்பரத்தில் எழுந்தருளி உலா நடந்தது. தொடர்ந்து 108 மகாதேவர் சன்னதியில் சுவாமி சண்முகர் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. மாலை 4 மணிக்கு சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளினார். சுவாமிக்கு அங்கு மகாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சுவாமி சண்முகர் எழுந்தருளி உலா நடந்தது. 8ம் திருவிழாவான இன்று சுவாமி சண்முகர் அதிகாலையில் வெள்ளை சாத்தி கோலத்திலும், பகலில் பச்சை சாத்தி கோலத்திலும் உட்பிரகாரத்தில் எழுந்தருளி உலா நடக்கிறது.