நாகர்கோயில் சித்ரா இந்து மத நூல் நூலகம் மீண்டும் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03செப் 2021 07:09
கன்னியாகுமரி: நாகர்கோயில், சுசீந்திரம் சித்ரா இந்து மத நூல் நிலையம் 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் உத்தரவின்படி திறக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கன்னியாகுமரி மாவட்ட கோயில்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு கடந்த மாதம் 13ம் தேதி ஆய்வு மேற்கொண்டார். நாகர்கோயில் அண்ணா ஸ்டேடியம் அருகில் மஹாராஜாவால் இந்து சமயம் பற்றி அறிந்து கொள்ளும் வகையில் நூலகம் அமைக்கப்பட்டது. இந்த நூலகம் சித்ரா நூலகம் என அழைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக உரிய பராமரிப்பின்றி பூட்டி கிடந்ததாகவும், இந்து சமய நூல்கள் அடங்கிய சித்ரா நூலகத்தை மீண்டும் திறந்து பராமரிக்க வேண்டும். வாசகர்களை அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் நூலகத்தை பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் நூலகம் பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. தினமும் காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நூலகம் செயல்படும். வாரத்தின் திங்கட்கிழமை விடுமுறை. ஆன்மிகம் சம்பந்தமான நூல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ஆன்மிகம் தொடர்பான பல நூல்கள் புதிதாக வைக்க ஏற்பாடு செய்யப்படும். சித்ரா நூலகம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து இருப்பதை இந்து அமைப்புகள் வரவேற்றுள்ளன. இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.