விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு பொம்மைகள் விற்பனை ஜோர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05செப் 2021 07:09
ராமநாதபுரம் : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ராமநாதபுரத்தில் விநாயகர் பொம்மைகள் விற்பனை களைக்கட்டியுள்ளது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றானவிநாயகர் சதுர்த்திவிழா வரும் செப்.,10 ல் கொண்டாடப்படுகிறது. வீடுதோறும் களிமண், சுட்டமண் பொம்மைகளை வைத்து, கொழுக்கட்டை செய்து வழிபடுவது வழக்கமாகும். இவ்விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் கடைகளில் களிமண் மற்றும் சுட்ட விநாயகர் சிலைகள் பல வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. விருத்தாச்சலம் பகுதியிலிருந்து வாங்கி வந்து சிறிய விநாயகர் விலை ரூ.40 முதல் ரூ.400 வரை விற்கப்படுகிறது. பிடித்தமான விநாயகர் பொம்மைகளை ஆர்வத்துடன் மக்கள் வாங்குவதாக வியாபாரிகள் கூறினர்.