திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஆவணி மூலத்திருவிழா பிரசித்தி பெற்றது. இந்த விழா கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் உள் திருவிழாவாக நடந்தது. சுவாமி சந்நிதி உள்கொடி மரத்தில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்பட வில்லை . சுவாமி , அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. கோயில் வாசலில் நின்று மக்கள் கும்பிட்டனர். 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.