திருச்செந்துார் ஆவணி திருவிழா சுவாமி தேரில் வீதியுலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2021 10:09
திருச்செந்துார்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா 10-ம் திருநாளான நேற்று தேரோட்டத்தை முன்னிட்டு கோயில் உள்பிரகாரத்தில் சுவாமி சிறிய தேரில் வலம் வந்தார்.
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் டந்த 27-ம் தி ஆவணித் திருவிழா கொடி யேற்றத்துடன் துவங்கியது. 10-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 ணிக்கு உதயமாத்தாண்ட அபிஷேகமும், டர்ந்து தீபாராதனையும் நடந்தது. வழக்கமாக ரதவீதியில் நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதால், கோயில் உள்பிரகாரத்தில் சிறிய தேரில் கழ்ச்சி நடந்தது. காலை 6.15 ணிக்கு உள்பிரகாரம் ஐராவத மண்டபத்தில் இருந்து விநாயகர் சிறிய தேரில் எழுந்தருளி பிரகாரம் வலம் வந்து மீண்டும் ஐராவத மண்டபத்திற்கு வந்தார். தொடர்ந்து அதே தேரில் சுவாமி குமரவிடங்கபெருமான், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளி உள்பிரகாரத்தில் பவனி வந்தார். இதனையடுத்து மீண்டும் அதே ரதத்தில் வள்ளியம்பாள் எழுந்தருளி உள்பிரகாரத்தில் பவனி வந்தார்.
பக்தர்களுக்கு அனுமதி : நேற்று திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி நிறைவடைந்ததையடுத்து, இன்று (6ம் தேதி) முதல் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.