71ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தினமலர் நாளிதழுக்கு சத்குரு வாழ்த்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2021 11:09
தொண்டாமுத்தூர்: தினமலர் நாளிதழுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: 71ம் ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் தினமலர் குழுவிற்கு நல்வாழ்த்துக்கள். தினமலர், தேசத்தின் வளர்ச்சியோடு சேர்ந்து வளர்ந்துள்ள ஓர் அமைப்பு. இந்தியாவும், தமிழகமும் தம் உண்மையான ஆற்றலை உணரும் விதம், வளர்ந்து முதிர்ந்து வரும் இவ்வேளையில், பொறுப்பான ஊடகங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக உயர்ந்து நிற்க வேண்டும். அதீத நேர்மையுடனும், உண்மையான ஊடக தர்மத்திற்கான அர்ப்பணிப்புடனும் உங்கள் பயணம் தொடர வேண்டும். ஆசிகள். இவ்வாறு தினமலர் நாளிதழுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து தெரிவித்துள்ளார்.