விவசாயி ஒருவர் தன் வயலில் விதை நெல்லை துாவினார். அப்போது நிலத்திற்கு அருகில் உள்ள புதரில் சில நெல்கள் விழுந்தன. புதரில் விழுந்த நெல் பயன் தருமா... இது போலவே சிலர் உயர்ந்த கருத்துக்களை கூறுகின்றனர். அதை முழுமையாக ஏற்றுக்கொள்பவர்கள் வெற்றி அடைகிறார்கள். பிறரோ வெற்றிக்கு ஏங்குகின்றனர். இவர்களில் யாராக இருக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். முடிவு உங்கள் கையில்தான் உள்ளது.