அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழா பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06செப் 2021 06:09
சென்னை : அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்தில், கடந்த 29ம் தேதி கொடியேற்ற விழா நடந்தது.வரும் 7ம் தேதி, தேவாலயத்தில் தேரோட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, கொரோனா தொற்று காரணமாக, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை.மேலும், அன்று கடற்கரைப் பகுதிக்கு வாகனத்துடன் வர வேண்டாம். இதுமட்டுமின்றி, வரும் 8ம் தேதி வரை, தேவாலயத்தை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.