பதிவு செய்த நாள்
08
செப்
2021
02:09
பெங்களூரு : ஏழு பேரின் இறந்த கோரமங்களா கார் விபத்தில், அருகில் உள்ள ஆஞ்சனேயர் சுவாமி சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
அதுபோல, அந்த சிலை அருகில் படுத்திருந்த நபரும் உயிர் தப்பினார்.பெங்களூரு கோரமங்களாவில், திருமண மண்டபம் அருகில், ஆகஸ்ட் 30 இரவில், அதிவேகமாக வந்த கார், திடீரென விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. அதில் இருந்த ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷின் ஒரே மகன் கருணா சாகர், 28, அவரது காதலி பிந்து உட்பட, ஏழு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இந்த விபத்து தமிழகம் மற்றும் கர்நாடகாவை உலுக்கியது.இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது; போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், கார் விபத்தில் இதுவரை வெளியே தெரியாத, இரண்டு ஆச்சர்யமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.விபத்து நடத்த இடத்தில், சிறிய ஆஞ்சனேயர் கோவில் உள்ளது.
இங்கு பக்தர்கள், தினமும் பூஜை செய்வர். விபத்துக்கு காரணமான கார், ஒரு அடி முன்னே நகர்ந்திருந்தால், ஆஞ்சனேயர் சிலை சிதைந்து போயிருக்கும்.இதே சிலை அருகில் இரவில் தினமும் ஒருவர் இரவில் படுத்து உறங்குவது வழக்கம். ஆனால் சம்பவ நாளன்று, அந்த நபர் அங்கு படுக்கவில்லை. இதனால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.கார் விபத்துக்கு உள்ளானவுடன், அப்பகுதியினர் உதவிக்கு வந்தனர். அப்போது அவர்கள், காரில் மோதி அந்த நபர் இறந்திருக்கலாம் என நினைத்தனர். ஏனென்றால் அவர் படுத்திருந்த அதே இடத்தில் தான் விபத்து நடந்தது. அதில் சிக்கியிருந்தால், அந்நபரின் ஒரு எலும்பும் மிஞ்சியிருக்காது என, அப்பகுதியினர் ஆச்சரியமாக பேசிக் கொள்கின்றனர்.